திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பனைஓலைப்பாடி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஐந்து மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை யூனியன் சேர்மனும், தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளருமான சுந்தரபாண்டியன் வழங்கினார். அப்போது பேசிய யூனியன் சேர்மன் சுந்தரபாண்டியன், மாணவர்கள் நீங்கள் சிறந்த முறையில் படித்து சாதிக்க வேண்டும். மாணவர்கள் நீங்கள் படித்தால் தான் உங்கள் எதிர்காலம் சிறந்த முறையில் இருக்கும். ஆகையால் கட்டாயம் நீங்கள் படிக்க வேண்டும். படிப்பு தான் உங்களுக்கு மிகப்பெரிய சொத்து.
அதனால் படித்து அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளாக வரவேண்டும் என்று மாணவர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்கப்பள்ளி ) கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், தலைமையாசிரியர் கோடீஸ்வரன், வட்டார கல்வி அலுவலர்கள் சுப கோவிந்தராஜ், ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிமுத்து, சசிகலா, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜெகன், இந்துமதி ஆகியோர் உடனிருந்தனர்.