திண்டிவனம் அருகே மது போதையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை எரித்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சலவாதி வாட்டர் டேங்க் அருகே கடந்த 24 ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ஏழுமலை என்கின்ற ஆலி (19).
இவர் மது போதையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் சேர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தின் மீது ஏறி அதிலிருந்து கொடியை தீயிட்டு கொளுத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சலவாதிப் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி பொறுப்பாளர் மூர்த்தி ரோஷனை போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் ரோஷனை போலீசார் சம்பந்தப்பட்ட சிறுவன் உள்ளிட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.