திண்டிவனம் அருகே புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வெளி மாநில மதுபாட்டில்களை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கம் சோதனைச் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 750 மி.லி அளவுள்ள 88 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்த நாசரேத் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் விங்ஸ்லி அதனேசியஸ் (40), சென்னை, மாங்காடு மகாலிங்கம் மகன் சதீஷ்குமார் (40), மானூர் பொய்யாதப்பன் மகன் செல்வம் (42) ஆகிய மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.