திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் விமர்சியாக நடைபெற உள்ள நிலையில் தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திடல் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவுக்கு சுமார் 40 முதல் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் செல்போன் டவர்கள் இணைப்புகள் கிடைக்காமல் தப்பித்துப் போகும் நிலை இருப்பதாகவும் அதுபோன்று இல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியவர்.
மேலும் தற்காலிக பேருந்து நிலையங்களில் வைக்கப்படும் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தண்ணீர் இருப்பதில்லை என்று குற்றச்சாட்டு வருவதாகவும் இந்த ஆண்டு அதுபோல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார் மேலும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மின் இணைப்புகள் துண்டிக்காமல் இருக்குமாறு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்களை கூடுதலாக இயக்கவும் அறிவுறுத்தினார்.கிரிவல பாதையில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்கவும் ரோந்து பணிகளை தீவிர படுத்தவும் அறிவுறுத்தியவர் திருவிழாவுக்கு வருகை தந்து விடுதிகளில் தங்கி இருந்தவர்களை கணக்கெடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் திருவண்ணாமலையில் பயனற்ற நிலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை மாற்றி புதிய வகை சிசிடிவி கேமராக்களை மாற்றவும் தேவைப்படும் நிதியினை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தினார்.
கிரிவலப் பாதையில் உள்ள மரச் சிற்பங்களையும் கண்காணித்து சீரமைக்கவும் அறிவுறுத்தினார்.தீபத் திருவிழாவின்போது காவல்துறை வருவாய்த்துறை இந்து அறநிலையத்துறை என மூன்று துறைகளில் சார்பில் குழு அமைக்கப்பட்டு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் பிரதான கோபுரங்களில் பணியமர்த்தவும் அறிவுறுத்தினார்.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் திருநாள் அன்று நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு உள்ளே வரும் பக்தர்களை பிரதான கோபுரங்களின் நுழைவாயில் முன்பாக கூட்டம் அதிகமாக சேருவதை தவிர்க்க பல கட்ட சோதனைகளை அமைத்து பரிசோதிக்கவும் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சேகர்பாபு பேசுகையில் திரு கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் திருநாள் அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை கூட்டமான பகுதிகளில் இளைஞர்களையும் சற்று கூட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் வயது முதிர்ந்தவர்களையும் பணியமற்ற அறிவுறுத்தினார் மேலும் ஷிப்ட் முறையில் பணியாற்றுவதற்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திரு கார்த்திகை தீபத் திருவிழாவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும்.
2,668 அடி உயரத்தில் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தினை பார்த்து விட்டு வரும்போது மலையில் தீ மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகவும் அதனைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவித்திருப்பதாகவும்.திருவிழா காலங்களில் ஆட்டோ கட்டண உயர்வை கட்டுப்படுத்த ஆர்டிஓ அதிகாரிகள் மூலம் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி இருப்பதாகவும்.
இந்த ஆண்டு அருணாச்சலேஸ்வரர் திரு கார்த்திகை தீபத் திருவிழா சேகர்பாபு தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்தவர்.திரு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் போது செல்போன் தவறுகள் இணைப்பு கிடைக்காமல் இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அறிவுரை.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை பார்த்துவிட்டு மீண்டும் தங்கள் ஊருக்கு செல்லும் தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக ரயில்களை இயக்கவும் பொதுப்பணித்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுரை…..திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இந்த ஆண்டு நடைபெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அருணாச்சலேஸ்வரர் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் நல்லதே நடக்கும் என்று அனைவரும் எண்ணுவோம் நல்லதே நடக்கும் என்று பேசிய அமைச்சர் சேகர்பாபு.
முன்னதாக திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆலோசனை கூட்டத்திற்கு வருகை புரிந்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தீபத் திருவிழாவின் முன் ஏற்பாடுகளை குறித்து கோவில் ஊழியர்களிடமும் அதிகாரிகளிடமும் கேட்டறிந்து அங்குள்ள தங்கத்தேர் சீர் அமைக்கப்படுவதை ஆய்வு செய்தார்.