திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சுற்றுச்சூழல் அணி சார்பில் 3 நாட்கள் பவள விழா நடைபெறுகிறது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சுற்றுசூழல் அணிகளின் சார்பில், கழக பவள விழாவினை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில் மூன்று நாட்கள் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, நலஉதவிகள் வழங்கி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். நவம்பர் 23, 24, 25 சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சுற்றுசூழல் அணிகளின் சார்பில், கழக பவள விழாவினை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில் பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது.
அதன்படி, 23-ம் தேதி நடைபெறும் பவள விழா பொதுக்கூட்டத்திற்கு மாநில தொ.மு.ச., துணைத் தலைவர் சௌந்தரராசன் தலைமை வகிக்கிறார். 24-ம் தேதி நடைபெறும் பவள விழா பொதுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை தலைமை வகிக்கிறார். 25-ம் தேதி நடைபெறும் பவள விழா பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சு.விஜி (எ) விஜயராஜ் தலைமை வகிக்கிறார்.பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு, பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினருமான எ.வ.வேலு பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.