திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடப் பிரிவு இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வரலாற்று துறை பாடப் பிரிவும் இருந்து வருகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் தலா நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அரசியல் அறிவியல் துறைத் தலைவரை, – வரலாற்று துறை தலைவர் அவதூறாக பேசியதாக கூறப்பஈடுகிறது. இந்த தகவல் அரசியல் அறிவியல் துறை மாணவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இதனால், கோபமடைந்த அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவு வாயிலில் ஒன்று திறண்டனர்.
வரலாற்று துறைத் தலைவரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அரசியல் அறிவியல் துறைத் தலைவரிடம் – வரலாற்றுத் துறைத் தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் முன் வைத்தனர். இதை அறிந்த கல்லூரி முதல்வர் கலைவாணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணாவில் ஈடுபட்டிருந்த மாணவ, மாணவிகளை சமாதானப்படுத்தி பேச்சு வார்த்தைக்கான கல்லூரிக்குள் அழைத்து சென்றார். இதனால், செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் நேற்று பதற்றமான சூழ்நிலை நிலவியது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பட விளக்கம்:
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று துறைத் தலைவரை கண்டித்து, – அரசியல் அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் கல்லூரி நுழைவு வாயிலில் நேற்று திடீரென தர்ணாவில் ஈடுபட்ட தால் பதற்றம் ஏற்பட்டது.