சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு போட்டிகள் மற்றும் கலை விழா வருகின்ற நவம்பர் 29ம் தேதி கல்லூரியின் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான போஸ்டர் வெளியீட்டு விழா கல்லூரி நூலக அரங்கில் நடைப்பெற்றது.இந்த விழாவில் இளம் விஞ்ஞானி, இளம் கண்டுபிடிப்பாளர், கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், வினாடி வினா, பாடல் மற்றும் இசை, பேச்சு போட்டி, பழம்/காய்கறி செதுக்குதல், மைம், நடனம் (குழு மற்றும் தனி), வேடிக்கை விளையாட்டுகள் போன்ற பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளில் பங்கேற்க அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேலம் மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளில் இருந்து பங்கேற்க உள்ளனர். பள்ளி மாணவர்களின் தனி திறன்களை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்களது தனித்திறமைகளை திறம்பட வெளிப்படுத்த வேண்டும் என சோனா கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்வின்போது துறைத்தலைவர் முனைவர் ரேணுகா, விழாவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செந்தில்வடிவு மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.