வேலூரில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு உயிர்நீத்த 213 காவல்துறையினருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் காவல்துறை சி.ஐ.எஸ்.எப் தேசிய பாதுகாப்பு படை எல்லை பாதுகாப்பு படை தொழிற்பாதுகாப்பு படை காவலர்கள் தேசிய பேரிடர் மீட்பு குழு காவலர்கள் என மொத்தம் 213 பேர் நாடு முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் தாக்குதலில் உயிழந்துள்ளனர்.
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், காவலர் வீரவணக்க நாளான நேற்று வேலூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுதூணுக்கு மலர் வளையம் வைத்து வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தேவராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மற்றும் முன்னாள் காவல்துறையினரும் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலியை செலுத்தினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.