கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் நகர திமுக சார்பில், கீழ்பென்னாத்தூர் அவலூர்பேட்டை சாலை கலைஞர் திடலில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் கோ.சரவணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சி.க.பன்னீர்செல்வம் மற்றும் துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக நகர செயலாளர் சி.கே.அன்பு அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர், திமுக தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, திமுக கழக துணை அமைப்புச் செயலாளர் தாயகம் கவி மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஈகை தனசேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நான்காண்டு ஆட்சி அனைவருக்கும் ஆன ஆட்சியாகவும், இந்த பொற்கால ஆட்சியில் அனைத்து திட்டங்களும் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் தமிழக முதல்வர், அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் எனவும், தமிழக மக்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவந்து அதனை சிறப்பாக செயல்படுத்துவதும் நமது முதல்வர்” என பேசினார்.
இதில், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அண்ணாமலை, மாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர்கள் சிவக்குமார், மு.பரசுராமன், மா.குப்புசாமி, சி.தேவேந்திரன், வேட்டவலம் நகர செயலாளர் ப.முருகையன், துணை செயலாளர்கள் பழனி, இளங்கோ, கருணாநிதி, பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய, நகர திமுக அனைத்து பிரிவு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞரணி உட்பட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்ட முடிவில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் செ.வினோத் நன்றி கூறினார்.