திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஊராட்சிகளில் 2 ஊராட்சி செயலாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் த.தர்ப்பகராஜ் தலைமையில் திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆய்வு பணிகள் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டிங்குப்பம் ஊராட்சி செயலாளர் தவமணி, கிராம வரி இனங்களில் முன்னேற்றம் காண்பிக்காதது மற்றும் வசூல் செய்யப்படாமல் இருந்துள்ள நிலையிலும், மேலும் உரிய முன் அனுமதி எதுவும் பெறாமல் தன்னிச்சையாக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத காரணத்திற்காகவும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் செங்கம் ஊராட்சி ஒன்றியம், செ.நாச்சிப்பட்டு கிராம ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி செயலாளர் சௌந்தர்ராஜன், கிராம வரி இனங்களில் முன்னேற்றம் காண்பிக்காதது மற்றும் வசூல் செய்யப்படாமல் இருப்பது, ஊராட்சி கணக்குகள் மற்றும் பதிவேடுகள் முறையாக பராமரிக்க தவறியதற்காகவும் தற்காலிக பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.