மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெய்வேலி நகர 24 வது மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.
24 சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டுக் கொடியினை நகர குழு உறுப்பினர் எம்.அன்பழகன் ஏற்றி வைத்தார்.
நகர குழு உறுப்பினர் வி.குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
வேலை அறிக்கையை நகர செயலாளர் பாலமுருகன் சமர்ப்பித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், எஸ். திருஅரசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.மேரி, எம்.சீனிவாசன், பி.மாதவி உள்ளிட்டோர் பேசினார்கள். மாநாட்டை நிறைவு செய்து மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார்.
பி.பழனிவேல் நன்றி கூறினார்.
நெய்வேலி நகர செயலாளராக மீண்டும் ஆர். பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் வாரிசுகள், வீடு – நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர், இறந்தோர் வாரிசு, அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தோர், மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, டிகிரி படித்துள்ள இளைஞர்கள் உள்ளிட்டோரை நிரப்ப வேண்டும்.
பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ள சொசைட்டி தொழிலாளர்களுக்கு டபிள்யூ -3 ஸ்கேல் பொருத்தி ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும்,
மீதமுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் இணைத்து மருத்தவ புத்தகம் வழங்க வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் சமமான ஒப்பந்த கூலி வழங்க வேண்டும் என்றும்
இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.