திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் மஷார் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42.36 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.
இதனை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் எம்.எல்.ஏ பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார். உடன் புதுப்பாளையம் ஒன்றிய குழு பெருந்தலைவரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான சி. சுந்தரபாண்டியன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் நவீன்குமார், அரசு ஒப்பந்ததாரர் செல்வகுமார், புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, பள்ளி தலைமையாசிரியர் விஜய் ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர் தீர்த்தமலை, பஞ்சாயத்து துணை தலைவர் தாரணி கருணாநிதி, உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.