தமிழக முதல்வரின் சிறப்பான திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும் என கடலூர் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம். கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்பாடு, முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது:
மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் பணியாகும்.
மத்திய அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்பாடுகளை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வு கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வளர் இளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து மேம்படுத்துதல், கர்ப்பிணி தாய்மார்களின் நலனுக்கான திட்டம், கருவுற்ற மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு பல்வேறு மருத்துவ வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஊரகப் பகுதிகளிலுள்ள ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில், ஊரகப் பகுதிகளில் இருந்து நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதை குறைக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் கிராம ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குதல், திட. திரவ கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்ற மேற்கொள்வதற்காக துாய்மைபாரத மேற்கொள்ளப்படுகின்றன.
இயக்கம் மூலம் பல்வேறு பணிகள் இந்தியாவிலேயே தமிழகம் தலை சிறந்த மாநிலமாக திகழும் வகையில் அனைத்துத் திட்டங்களையும் மிகச் சிறப்பாகவும், திட்டங்களின் பயன் அடித்தட்டு மக்கள் வரை சென்றடையும் வகையில் செயல்படுத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில் மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும், மாநில அரசின் திட்டங்களாக இருந்தாலும் குறித்த காலத்திற்குள் தரமான வகையில் முடிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்துத் திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன். நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன். விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.இராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணைமேயர் பா.தாமரைசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலர்.ம.இராஜசேகரன், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) /திட்ட இயக்குநர் இரா.சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அணு, சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி ரஷ்மி ராணி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.