திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புனரமைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். உடன் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி. சரவணன் (கலசப்பாக்கம்), ஒ.ஜோதி (செய்யாறு), திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட ஊராட்சிச் செயலர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மிருனாளினி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.