தேசிய அளவிலான நடன போட்டிக்கு கல்வராயன் மலையைச் சேர்ந்த மாணவி தேர்வாகியுள்ளார்.தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை ஏகலைவா மாதிரி பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கலாச்சார மற்றும் இலக்கிய போட்டிகள் கடந்த வாரம் சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையம் அருகில் உள்ள ஏகலைவா உண்டி உறைவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இந்த நடனபோட்டியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை கரியாலூர் ஊராட்சியில் அமைந்துள்ள புளுவபாடி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகள் சினேகா என்ற மாணவி, நடன போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நடன போட்டியில் இந்த மாணவி பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.