கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளில் 10 முதல் 14 வயது வரையுள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் தனி சிறப்புப்பள்ளிகளுக்கு, 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், நின்று தாண்டுதல் இருபாலருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.
10 வயதுக்கு கீழ் உள்ள மனவளர்ச்சி குன்றிய சிறார்களிடையே ஓட்டப்பந்தயம், உருளைக்கிழங்கு சேகரித்தல் போட்டியுடன் 17 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடையே வீல் சேர் பந்தயம் நடைபெற்றது.கலந்து கொண்ட அனைவர்க்கும் பரிசுகள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் புனித அன்னாள் சிறப்புப்பள்ளி, ஆதி சிறப்புப்பள்ளி, பாடசாலை சிறப்புப்பள்ளி மற்றும் அனைக்கும் கரங்கள் சிறப்புப்பள்ளி, மாற்றுத்திறனாளி சங்கங்கள் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இதில் 250 மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.