இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் விண்ணப்பங்களை www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். அக்னிவீர் பொதுப் பணி, அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் எழுத்தர்/அக்னிவீர் ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10-ஆம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (8-ஆம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வர்கள் அக்னிவீர் பணியிடத்திற்கு தங்கள் தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு ஏப்ரல் 10-ஆம் தேதி முடிவடையும். ஜூன் 2025-ல் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு ஆன்லைனில் வழங்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.