ஆரணியில் வடார்காடு கலை இலக்கிய வெளி தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மண்டி வீதியில் உள்ள மதுரம் அரங்கில் வடார்காடு கலை இலக்கிய வெளி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. எழுத்தாளர் இளைய தமிழன் அனைவரையும் வரவேற்றார்.ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான ஈ.ர.மணிகண்டன் தனது உரையில், முந்தைய வடார்க்காடு மாவட்டத்தின் சிறப்பு அம்சங்களைப் பற்றியும், தற்பொழுது அதன் தொன்மைகளை இந்த கால இளைஞர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கில் வடார்காடு கலை இலக்கிய வெளி அமைப்பு தொடங்கப்படுவதாக தெரிவித்தார்.
வடார்க்காடு மாவட்ட வரலாறு, தொன்மைகள், மண் சார்ந்த விஷயங்கள், சம்புரவாய மன்னர்கள் படவேடு தலைமையிடமாகக் கொண்டு போர் தொடுத்தது ஆகியவற்றை முனைவர் அமுல்ராஜ் சிறப்பாக எடுத்துரைத்து பேசினார்.பின்னர் இந்த அமைப்பு பற்றி எழுத்தாளர் பவித்ரா ஆனந்தகுமார், முனைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக வடார்காடு கலை இலக்கிய வெளியின் சின்னம் அறிமுகம் படுத்தப்பட்டது. இறுதியாக சுபாஷ் முகிலன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.