திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள அங்காளம்மன் ஆலயத்தில் மாசி மாத மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் உற்சவர், சிம்ம வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பக்தர் கூட்டத்தில் வலம் வந்து, பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
திண்டிவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்த வந்திருந்தனர். அவர்கள் அங்காளம்மன், காளி போன்ற வேடங்களை அணிந்து மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் சாலை முழுவதும் அமர்க்களப்படுத்தினர்.
திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க, திண்டிவனம் டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.