செஞ்சி நகர திமுக சார்பில் 2 இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் கோடை வெயிலை முன்னிட்டு செஞ்சி நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி செஞ்சி தேசூர் பாட்டை மற்றும் புனித மிக்கேல் ஆலயம் எதிரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூர் நகர செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல் மணி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் கலந்துகொண்டு தேசூர் பாட்டை மற்றும் புனித மிக்கேல் ஆலயம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அவர்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் மகாலட்சுமி வெங்கடேசன், நிர்வாகிகள் முருகன், பழனி, ஹாஜி, சேசு நாடார், அருண் பன்னீர், செல்வராஜ், அன்புச்செல்வன், குணசேகரன், கார்த்திக், அறிவழகன், பிரபாகர், மகளிர் அணி பிரேமா, ஸ்டெல்லா, கோபி, செல்வா, முஸ்தபா, தீனா காதர், ரிஸ்வான், ரீகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.