இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும், என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் எ.வ. வேலு அறிவித்து உள்ளார்.
இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்துவதென திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.
திருவண்ணாமலை, திருக்கோயிலூர் ரோடு, சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அண்ணாதுரை எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.கண்ணதாசன், கோ.ராஜசேகர், எம்.ரமேஷ், எஸ்.சதிஷ்குமார், டி.திலிப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சு.ராஜாங்கம் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு சிறப்புரையாற்றினார்.
மூன்றாவது மண்டலத்தின் பொறுப்பாளர்களும், சமூக வலைதள ஆலோசகர் கோவி.லெனின், தகவல் தொழிற்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தருண் ஆகியோர் சமூக வலைதளங்களில் நமது செயல்பாடு குறித்து, இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்:1
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியில், நகர, ஒன்றிய, பேரூர் கழகத்திற்கு புதிய நிர்வாகிகள், இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்திட்ட, கழகத்தலைவர், தமிழ்நாடு முதல்வர், கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர், உதயநிதிஸ்டாலினுக்கும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கும், இந்தக்கூட்டம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
அதேசமயம், சட்டப்பேரவை துணைத்தலைவருக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்களுக்கும், மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம்: 2
மார்ச் 1-ம் ேததி மிழ்நாடு முதல்வரின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி பொதுமக்களுக்கும் பயனுள்ள வகையில் கொண்டாடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 3
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிட மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரைக்கு வாய்ப்பு வழங்கி, சிறப்பான வெற்றியடைய செய்த கழகத்தலைவர், தமிழ்நாடு முதல்வர், கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருக்கு இந்தக்கூட்டம் நன்றியினை தெரிவிக்கிறது.
அதேசமயம், சட்டப்பேரவை துணைத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்களுக்கும், மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் இந்தக்கூட்டம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற பொது தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என கழக போட்டியிட்ட 11 தேர்தல்களிலும், திராவிட மாடல் அரசு செய்துவரும், சிறப்பான ஆட்சிக்கு வெற்றியினை சான்றாக அளித்து வரும், தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும், கழகத்தலைவர் சார்பாகவும், இளைஞர் அணி செயலாளர் சார்பாகவும், அமைச்சர் சார்பாகவும், இக்கூட்டம் வணங்கி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 4
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிப்பது. சிறுபான்மையின விரோதப் போக்கு, கல்வியை காவியமாக்குதல், வரி வதிப்பு, இந்தி திணிப்பு, நீட் தேர்வு, யுசிஜி என்று தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும், ஒன்றிய பாஜக அரசுக்கும் மாநில உரிமை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநருக்கும். இக்கூட்டம் வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது.
தீர்மானம்: 5
திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கும் புதிய சாலைகள், கட்டிடங்கள், பாலங்கள், தலைவர்களின் சிலைகள், நினைவு நுழைவுவாயில்கள் போன்ற பல்வேறு புதிய திட்டங்கள். பணிகள் என செவ்வன, சிறப்பான ஆட்சி செய்து வரும் கழகத்தலைவர் தமிழ்நாட்டு முதல்வருக்கும், கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாட்டு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலினுக்கும்,
இந்த மாவட்டத்தை தலைசிறந்த மாவட்டமாக, அழகிய சிற்பமாக செதுக்கி வரும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு, இந்தக்கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம்: 6
பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமா எ.வ.வே வழிகாட்டுதல்படி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாக இளைஞர் அணி பாசறைக்கூட்டம் நடத்துவது, முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் அமைப்பது. வார்டு, கிளைக்கழகம் வரை இளைஞர் அணி நிர்வாகிகள் நியமித்தல் மற்றும் தமிழ்நாட்டுக்கு நிதிபகிர்வு பாரபட்சம், இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட இளைஞர் அணி சார்பில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்துவது என வரும் நாட்களில் மேற்கண்ட கழக பணிகள் அனைத்தையும் சிறப்பாகவும், விரைந்து முடித்திட வேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம்: 7
தலைவர் கலைஞரால் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட வானுயிர வள்ளுவன் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையில் கண்ணாடி இழை பாலம் அமைத்து இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கண்ணாடி இழைப்பாலம் சிறப்பாக அமைந்திட அயராத உழைத்திட்ட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி பாராட்டுதல்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கழக மருத்துவரணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மண்டல பொறுப்பாளரும், மாநில இளைஞரணி துணை செயலாளர் க.பிரபு கஜேந்திரன்,
மாவட்ட அவைத் தலைவர் கோ.கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.முத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம்,
மாவட்ட துணை செயலாளர்கள் ப்ரியா ப.விஜயரங்கன், விஜயலட்சுமி ரமேஷ், மாநில தொ.மு.ச., துணைத் தலைவர் க.சௌந்தரராசன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன்,
ஒன்றிய செயலாளர்கள் அ.சிவக்குமார், மு.பன்னீர்செல்வம், வி.பி.அண்ணாமலை, ஆராஞ்சி.ஆறுமுகம், சி.சுந்தரபாண்டியன், மெய்யூர்.சந்திரன், த.ரமணன், பெ.கோவிந்தன், ப.கேசவன், கோ.ரமேஷ், சி.மாரிமுத்து, எஸ்.சிவசேமன், க.சுப்பிரமணி, இரா.ராஜேந்திரன், ஆர்.வி.சேகர், கி.ஆறுமுகம், பா.ராமஜெயம், த.செந்தில்குமார், அ.ஏழுமலை, த.மனோகரன்,
பேரூர் செயலாளர்கள் சி.கே.அன்பு, ப.முருகையன், மு.அன்பழகன், எம்.சீனுவாசன் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் உட்பட ஏரளமானோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக நகர இளைஞர் அணி அமைப்பாளர் மண்டி ஆ.பிரகாஷ் நன்றி கூறினார்.