திருவண்ணாமலை எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் அங்கமான எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு கல்விக் குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். இணை செயலாளர் அரங்கசாமி, நிர்வாக அதிகாரி சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கல்லூரி முதல்வர் பாஸ்கரன், மக்கள் தொடர்பு அலுவலர் சையத் ஜஹிருத்தீன், துறைத் தலைவர்கள் குபேரன், ஸ்ரீதேவி, புருஷோத்தமன், ராஜி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முதலாம் ஆண்டு துறைத்தலைவர் தனசேகரன், பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.