கடலூர் தென்பெண்ணையாற்றில் இளம்பெண் சடலத்தை மீட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் குண்டு சாலையை ஒட்டிய தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை இளம்பெண் ஒருவரின் சடலம் மிதந்தை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார், சடலத்தை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்த அப்பெண்ணின் பெயர் கலைச்செல்வி (36). இவரின் கணவர் குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெரிய காட்டு சாகையை சேர்ந்த ஜெகதீஷ் குமார் (40). இருவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன் கலைச்செல்வி தலை பிரசவத்திற்காக கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது ஆறு மாதக் கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கலைச்செல்வி அம்மாவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை எனவும் அம்மா மேதா போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து கலைச்செல்வி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கடத்திச் செல்லப்பட்டு வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது குடும்பத் தகராறு காரணமா என்பது குறித்து தீவிரன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.