வந்தவாசி அருகே சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவசாயக் கிணற்றில் விழுந்து மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வங்காரம் கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவசாய கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை போரூர் அருகே காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லா (எ) தமிழ்ச்செல்வன் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் சென்னை காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அம்மு என்ற பெண்ணும், விவசாய நிலத்தின் உரிமையாளர் முருகன் மற்றும் மாரியம்மாள் ஆகியோர் உயிரிழந்த செல்லா (எ) தமிழ்செல்வனின் ஆட்டோவில் சென்னையிலிருந்து வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர். இரவு வந்தவாசி அடுத்த வங்காரம் கிராமத்தில் உள்ள முருகனின் விவசாய நிலத்தில் மது அருந்திவிட்டு ஆட்டோ டிரைவர் தூங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் ஆட்டோ டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரை யாரும் கொலை செய்து விட்டு கிணற்றில் தள்ளிவிட்டார்களா? அல்லது தானாக விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.