திருவண்ணாமலை அருகே நடந்த சாலை விபத்தில் எலக்ட்ரிசியன் பரிதாபமாக பலியானார்.
திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.
இவர் தனது கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இருசக்கர வாகனத்தில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரி அருகே நேற்று முன்தினம் காலை வந்துள்ளார்.அப்போது பின்னால் பூக்களை ஏற்றி வந்த மினி சரக்கு வாகனம் மணிகண்டன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்து திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து மினி சரக்கு வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
விபத்தில் உயிர் இழந்த மணிகண்டனுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.