திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் நிர்வாண சாமியார் கிரிவலம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு கிரிவலம் மற்றும் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வடமாநிலங்களில் இருந்து ஒரு சில சன்னியாசிகளும் வருகின்றனர்.
அப்படி வரக்கூடிய சன்யாசிகளில் ஒரு சிலர் நிர்வாணமாக வருகின்றனர். அது போல் நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சன்யாசி ஒருவர் நிர்வாணமாக கிரிவலம் வந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த சன்யாசியை மடக்கி, இதுபோல் கிரிவலம் செல்லக்கூடாது என்று கூறி சொந்த செலவில் புத்தாடை வாங்கி கட்டி விட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.