விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றியம் சிங்கவரம், பொன்பத்தி, மேல்எடையாளம், ஊரணி தாங்கள், ஜெயங்கொண்டான், கோனை, அப்பம்பட்டு ஆகிய ஊராட்சிகளின் பாக முகவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அப்பம்பட்டில் நடைபெற்றது.கூட்டத்திற்கு செஞ்சி ஒன்றிய பெருந்தலைவரும் செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிரிதிநிதி அய்யாதுரை அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவரும், செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செஞ்சி மஸ்தான், மாநில இளைஞரணி துணை செயலாளரும், செஞ்சிசட்டமன்ற தொகுதி பார்வையாளருமான அப்துல் மாலிக் கலந்துகொண்டு ஓட்டுச்சாவடி பாக முகவர்களுக்கு கருத்துக்களை கூறினார்.
கட்சி நிர்வாகிகள் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தொகுதி தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். ஓட்டு சாவடி பாக முகவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நடைபெற உள்ள வாக்காளர்கள் திருத்தம் சிறப்பு முகாமில் பாகமுகவர்கள் அனைவரும் கலந்துகொண்டு 18 வயது பூர்த்தியடைபவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்களையும், புதியதாக குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களையும், புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், சேர்க்கவும் உதவிட வேண்டும். நிர்வாகிகள் அடிக்கடி கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடமிருந்து குறைகளை கேட்டு அறிந்து தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், துணைசேர்மன் ஜெயபால், மாவட்ட கவுண்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர்கள் குமார், மதியழகன், பொருளாளர் இக்பால், மாவட்ட பிரதிநிதிகள் குணசேகரன், கோட்டீஸ்வரன், அனையேரி ரவி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பழனி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.