ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்களை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதை மாத்திரை பயன்படுத்துபவர்கள் குறித்த வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தேவதானம் பெட்ரோல் பங்க் அருகே, நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சோனையில் வாலாஜாபேட்டை தேவதானம் ஜெ.ஜெ. நகர், தருண், (22), ஆற்காடு கத்தியவாடி மெயின் ரோடு சரண், (23) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் இருந்து 110 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டு திருமலைச்சேரி சந்திப்பு, அருகில் நடத்தப்பட்ட சோதனையில் ஆற்காடு வட்டம், புதுப்பாடி, ஜி.எம். நகர் கவி சாண்டில்யன் (22), மணிகண்டன் (20), செய்யார் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், (24), ஆந்திர மாநிலம்,பூதலப்பட்டு அஞ்சல்,ஜட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நவீன், (32) ஆகிய 4 பேர்களிடம் இருந்து 1008 போதை மாத்திரை கைப்பற்றி மேற்கண்ட 6 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.