திருவாரூரில் பல லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 5 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து திருவாரூர் பகுதிக்கு இரண்டு கார்களில் 400 கிலோ எடை கொண்ட பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொருட்களை கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காருடன் திருவாரூரில் உள்ள தனியார் ஓட்டலுக்குள் நுழைந்த பொழுது அவரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது அவர் தன்னுடைய காரை விட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனியார் ஓட்டலில் வைத்து கஞ்சா கடத்தி வந்த 5பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.