திருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் பகுதியில் கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிபதி கோபிநாத் பரபரப்பு தீர்ப்பு வழங்னார்.
திருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2013-ம் ஆண்டு கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமார், விக்னேஷ் ஆகிய இருவருக்கும் ஆள் கடத்தல் குற்றத்திற்காக பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கொலை குற்றத்திற்காக இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 7,000 அபராதமும் விதித்து திருவண்ணாமலை கூடுதல் மாவட்ட நீதிபதி கோபிநாத் நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில், கூடுதல் குற்ற பொது வழக்கறிஞர் பழனி வாதாடினார்.