விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை அமைச்சர்
பொன்முடி மற்றும் ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு தாமரைக்குளம் பாண்டியன்
நகர் மற்றும் கட்டபொம்மன் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் செல்லும் வாய்க்கால்களில்
தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும்
ஆட்சியர் பழனி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துத்துறைகள் மூலம் முன்னேற்பாடு
பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், தொடர் மழையினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
நேற்றுமுன்தினம் கடலோர பகுதிகளான மரக்காணம் மற்றும் கோட்டக்குப்பம் பகுதிகளில் நேரில்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக கடந்த
ஒருவாரமாக கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டது. இதனால்
தொடர் மழை பெய்தும் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை.
விழுப்புரம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக, தாமரைக்குளம்
பகுதியில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தாமரைக்குளம் வழியாக கோலியனூர்
ஏரிக்கு செல்லும் மழைநீர் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பாண்டியன் நகர் பகுதியில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாண்டியன்
நகர் வழியாக பொன்னேரிக்கு செல்லும் மழைநீர் வாய்க்கால் தூர்வாரும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதையும், கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கட்டபொம்மன் நகர் பகுதியில் சென்னை திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து
கட்டபொம்மன் நகர் வழியாக கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை
நேரில் பார்வையிட்டதுடன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது
மேலும், வழுதரெட்டி காந்தி நகரில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று
வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக மாவட்
நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால்,
மழைபாதிப்பு மற்றும் மழைநீர் தேங்கும் நிலை தவிர்க்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்தாலும் மழை
பாதிப்பினை தடுத்திடும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்
என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
ஆய்வின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதம் சிகாமணி, மாவட்ட
ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு
,நகர்மன்ற துணைத் தலைவர் சித்திக் அலி, விழுப்புரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் கனிமொழி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.