திருவெண்ணெய்நல்லூர் சாலை விபத்தில் கவுரவ விரிவுரையாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார்(35). இவருக்கு ஞானகலை என்ற மனைவியும் விகாஷ் என்ற 4 வயது மகனும் கிரண் குமார் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர்.
இவர் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் துறை கௌரவ விரிவுரையாளராக பணியாற்றிய வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை நேற்று காலை கல்லூரிக்கு தனது டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது காணை சமுதாயக்கூடம் அருகே பின்னால் வந்த வாகனம் மோதி சாலைவிபத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் போராட்டத்தில் இவரும் முன்னின்று கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.