ரிஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே அதையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி (36).
பெயிண்டரான இவர் காட்டுஎடையாரில் வீடு ஒன்றிற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் இருந்த அலுமினியத்தால் ஆன பெயின் ரோலர், அருகில் உள்ள மின்கம்பி மீது உரசியதால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.