விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 75க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஊதியத்தை உயர்த்த வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரியில் 7300-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் தொகுப்பு ஊதியதில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனர்.
தங்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.25,000 மட்டுமே வழங்கப்பட்டு வரும் ஊதியம் போதாது என்றும், யுஜிசி நிர்ணயித்த மாதம் 57 ஆயிரத்து 700 ரூபாய் ஊதியத்தை வழங்க வேண்டும். பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.