சேலம் தொங்கும்பூங்கா அரங்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், கல்வி, திறன்மேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாடுகளுக்காக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கமம் நிகழ்வுக்கு விஆர்டிபி இயக்குநர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். திட்ட மேலாளர் விமல்ராஜ் வரவேற்றார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் பூர்ணிமாதேவி குத்துவிளக்கேற்றினார்.
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் குறித்த கண்காட்சியினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிலன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து பேசினார். மாவட்ட தொழில் மைய அலுவலர் மோகன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலர் தொண்டீஸ்வரன், தமிழ்நாடு உதவும் கரம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநில துணைத் தலைவர் டாக்டர் அத்தியன்னா, விழுதுகள் 87 அறக்கட்டளை முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். விஆர்டிபி மாவட்ட வளமேலாளர் ரம்யா நன்றி கூறினார்.
தொடர்ந்து இரண்டாம் அமர்வில் மாற்றுத்திறனாளிகள் பணியில் சாதனையாளர்கள் அனுபவ பகிர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும்மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.