சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவரும் மணல் கொள்ளையை அதிகாரிகள் கண்கொள்ளாமல் உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான மோட்டாம்பட்டி, தும்பை, பாச்சேரி, பாலப்பட்டு, அரசம்பட்டு, பூட்டை, சங்கராபுரம், மஞ்சப்புத்தூர், வளையாம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் இரவு பகல் பாராமல் மண் மற்றும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சங்கராபுரம் பகுதியில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனமாகவே செயல்பட்டு வருவது கேள்விக்குறியாகவே உள்ளது. அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு அனுமதிக்கப்படுகிறார்களா, இல்லை அரசியல் பின்புலத்தால் செயல்பட்டு வருகிறார்களா என்று தெரியாமல் சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.
மாவட்ட காவல் துறையும், மாவட்ட வருவாய் துறையும் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்.