பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில்
ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலக
மன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், தலைமை
தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் லட்சுமி லலிதா வேலன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், பாலமுருகன், ஆகியோர்
முன்னிலை வகித்தனர். அனைவரையும் அலுவலக மேலாளர் பாஸ்கரன்
வரவேற்றார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பெரணமல்லூர்,ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட
ஊராட்சிகளில் உலர் கலம், பேவர் பிளாக் சாலை, நாடக மேடை, புதிய தெரு
விளக்குகள், சமுதாய கிணறு, பள்ளிகளுக்கு சுற்றுச்சூவர், அங்கன்வாடி
மையங்களை சீரமைத்தல், சமையலறைகளை சீரமைத்தல், உள்பட ரூபாய்
1கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகளுக்கு மன்ற அதிகாரம்
கோரப்பட்டது.
முன்னதாக ஒன்றிய பொது நிதி வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது.
இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் குணசேகரன்,
பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்
ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பள்ளி கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள்,
புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிகள் சிறப்பாக செய்தனர்.
மேலும் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றியத்துக்கு புதியதாக வட்டார கல்வி
அலுவலக கட்டிடம் கட்டிதர வேண்டும் என மன்ற கூட்டத்தில் கோரிக்கை
வைத்தார்.