திருவண்ணாமலை செங்கம் ரோடு கிரிவல பாதையில் அருணாசலேஸ்வரர் கோவில் உபகோவிலாக உள்ள அருணகிரிநாதர் கோவிலுக்கு காஞ்சி சங்கரமடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று மாலை வருகை தந்தார்.
அப்போது அவரை அருணகிரிநாதர் மணி மண்டப அறக்கட்டளை தலைவர் சின்ராஜ். செயலாளர் அமரேசன். பொருளாளர் தனுசு ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து. விஜயேந்திர சரஸ்வதி சுவாமி அருணகிரி நாதரை வழிபட்டார். அப்போது மகாதீபராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் சார்பில் சிறப்பு பூரண கும்பமரியாதை செய்யப்பட்டது. பின்னர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி அருளாசி வழங்கினார். கோவிலுக்கு காஞ்சி சங்கரமடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்ததையொட்டி அருணகிரிநாதரின் திருப்புகழ்சபை உறுப்பினர்கள் திருப்புகழ்பாடினர்.
இந்த நிகழ்ச்சியில். அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜாராம். கோவில் இளவரசு பட்டம் ரமேஷ் குருக்கள். விழாக்குழு சண்முகம் பாவலர் ப.குப்பன் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (ஓய்வு) நடராஜன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.