திருவாரூர், அக். 17-
திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி, விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஒருநாள் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெய் நிறுவனம் ஆகியவை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் மூன்றாம் ஆண்டாக பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி, விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியில் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சௌந்தர்ராஜன், மாவட்ட கல்வி அலுவலர் இராஜேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்