வள்ளலார் நினைவு நாளான வருகிற 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் (டாஸ்மாக்கடைகள்), முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி (FL4A), அரசு மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் (FL3) ஆகியவற்றை எதிர்வரும் 11-ம் தேதி (செவ்வாய்கிழமை) வள்ளலார் நினைவு நாளன்று மூடப்படவேண்டும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் 11-ம்ட தேதி (செவ்வாய்கிழமை) வள்ளலார் நினைவு நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் (டாஸ்மாக்கடைகள்), முன்னாள் ராணுவவீரர்களுக்கான அங்காடி (FL4A), அரசு மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் (FL3) அனைத்தும் விற்பனையின்றி (Dry Day) மூடிவைக்கப்படும், என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.