திண்டிவனத்தில் தமிழக முதல்வரின் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படுமா என கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த மாதம் 27, 28 ஆகிய இரு தினங்கள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை புரிந்து பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
முன்னதாக கடந்த 27ஆம் தேதி திண்டிவனத்தில் தமிழக முதலமைச்சர் ரோடு ஷோ மற்றும் தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க வந்ததால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் நகருக்குள் நுழையும் பகுதி, நகர காவல் நிலையம் எதிர் புறம், ஜக்காம்பேட்டை சந்திப்பில் திண்டிவனம் நகரத்திலிருந்து வெளியேறும் பகுதி ஆக இடங்களில் விபத்துகளை தடுக்க வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்ததை அகற்றி தார் சாலை அமைத்தனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையிலும் அப்பகுதிகளில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் இதுவரை அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படும் என்பதால் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.