சேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க வாழ் இந்தியர்களை ராணுவ விமானத்தில் அவர்களின் கை மற்றும் கால்களில் விலங்கு பூட்டப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை கண்டிக்காமல் இந்திய மக்களுக்கு துரோகம் விளைவித்த பிரதமர் நரேந்தி மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை கண்டித்து, சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர தலைவர் ஏ.ஆர்.பி.பாஸ்கர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அவர் பேசுகையில், இந்தியர்களை கை மற்றும் கால்களில் விலங்கிட்டு மனித விரோத செயலில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவையும், அதனை வேடிக்கை பார்த்து மௌனம் சாதிக்கும் ஒன்றிய அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், மாநகரப் பொருளாளர் தாரை ராஜகணபதி, மாநகர வர்த்தக பிரிவு தலைவர் எம்.டி.சுப்பிரமணியம், மாநகர துணை தலைவர்கள் திருமுருகன், ரகுநாத், மொட்டையாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சானவாஸ், மெடிக்கல் பிரபு, மாநகர பொது செயலாளர் சாதிக் பாட்சா, ரஜினிகாந்த், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார், அகமது, ராமன், நாகராஜ், கந்தசாமி, நடராஜ், மாநகர செயலாளர் அம்மாபேட்டை கோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.