மறைந்த முன்னாள் செஞ்சி ஒன்றிய செயலாளர் ரங்கநாதனின் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் செஞ்சி ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் அவர்களின் 16வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு செஞ்சி கூட்ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் செஞ்சி ஒன்றிய செயலாளர் ரங்கநாதனின் திருவுருவப்படத்திற்கு செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி 1,000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார்அலி மஸ்தான் முன்னிலைவகித்தார். முன்னாள் நகர செயலாளர் காஜா நஜீர் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில்வல்லம் ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, ஒன்றிய துணை சேர்மன் ஜெயபாலன், மாவட்ட விவசாய துணை அமைப்பாளர் அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.