செஞ்சியில் உள்ள செக்கோவர் நிறுவனம் சார்பில், பள்ளியில் படிக்கும் 25 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தேசூர்பட்டையில் உள்ள செக்கோவர் நிறுவன அலுவலகத்தில், பெற்றோர்கள் இல்லா குழந்தைகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செக்கோவர் நிறுவனர் அம்பிகா சூசைராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் அரவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான், பள்ளியில் படிக்கும் 25 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் செக்கோவர் நிறுவன ஊழியர்கள் ஜெயசீலன், ரவீந்திரன், ராஜாராமன், பிலீப், அரவிந்தன், ஆல்வின், ராஜசேகர் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனார்.