கிரி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.
செங்கம் ஜன. 2-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ணாக்குருக்கை பகுதியில் 100 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.
கண்ணாக்குருக்கை பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் அப்பகுதி மக்களுக்கு போதுமான மின்சார வசதி இல்லாத காரணத்தால் மின்சார பற்றாக்குறை நிலவி வந்தது. இதனால் அடிக்கடி டிரான்ஸ்பார்மர் பழுதாவதால் வீடுகளில் மின்சார பற்றாக்குறையால் வீட்டில் உள்ள டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் போன்ற மின்சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு விடுவதால் பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரிடம் கண்ணாகுருக்கை பகுதியில் தெருவிளக்கு மற்றும் வீடுகளுக்கு செல்லும் மின்சாரத்திற்கு மட்டுமே தனி மின்மாற்றி அமைத்து தர வேண்டுமென கிரி எம்.எல்.ஏ.க்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
க்ஷ கோரிக்கையை ஏற்று கண்ணாக்குருக்கை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் தெரு மின்விளக்குகளுக்கும் மட்டுமே 100 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை கிரி எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
விழாவில், மின்சார துறை கோட்ட பொறியாளர் சங்கரன்,
ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கடயல்விழி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணம்மாள், வெங்கடேசன், கிளை கழக செயலாளர்கள் சரவணன், சுப்பிரமணி, ஏழுமலை, சுந்தரமூர்த்தி, ராஜவேல் ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் சரவணன், பவுன்குமார், திருமலை, பாண்டியன், முனுசாமி மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள், மின்சாரத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செங்கம் அடுத்த கண்ணாக்குருக்கை பகுதியில் 100 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.