சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சுற்றுலா பயணம் வரும் குடும்பங்களின் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குடும்பத்துடன் வந்து இருந்தனர். அணை, மற்றும் அங்குள்ள பூங்காக்களில் குடும்பமாக சுற்றிப்பார்த்த சுற்றுலா பயணிகள் பூங்காக்கள் பராமரிக்கப்படாமல் இருந்ததைப்பார்த்து முகம் சுளித்தபடி அங்கிருந்து அகன்று சென்றனர்.
அதே சமயத்தில் அந்த பூங்காக்களில் உள்ள சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு பொருட்கள் அதிகளவில் சேதம் அடைந்து இருப்பதை பெற்றோருடன் சுற்றுலா வந்திருந்த சிறுவர்கள் பார்த்து மிகுந்த ஏமாற்றத்துடன் பெற்றோருடன் சென்றனர்.சாத்தனூர் அணையில் அறிவியல் பூங்காவை , நன்கு பராமரிக்க வேண்டும். பழுதடைந்த நிலையில் இருக்கும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்களை உடனே சரி செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.