சத்தியமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சத்தியமங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கேமல் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் அபர்ணா ரவிசங்கர் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதில் நெல் கொள்முதல் அலுவலர் மதியழகன், பட்டியல் எழுத்தர் ராஜா தேசிங்கு, விவசாய சங்க நிர்வாகிகள் நரசிம்ம ராஜா, வெங்கடேசன், நிர்வாகிகள் திருவேங்கிடம், சாதிக் பாஷா, மோகன், மணி, சேட்டு,உள்ளிட்ட விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.