கல்வராயன் மலையில் மணல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றதொகுதி கல்வராயன்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரடிப்பட்டு ஊராட்சியில் ரூ.326.78 லட்சம் மதிப்பீட்டில், மணல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட உயர்மட்ட பாலம் திறப்பு விழா சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதனைத்தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், கல்வராயன்மலை ஒன்றிய குழு பெருந்தலைவர் சந்திரன், கல்வராயன்மலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன், கல்வராயன்மலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சின்னதம்பி, கல்வராயன்மலை ஒன்றிய குழு துணை பெருந்தலைவரும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட மகளிரணி தலைவியுமான பாட்சாபீ ஜாகீர்உசேன் மற்றும் கழக நிர்வாகிகள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள், அரசு அலுவலர்கள், கழக உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.