திண்டிவனத்தில் கல்லூரி மாணவியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கம்பெனி ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவி ஒருவர், பகுதி நேர பணிக்காக ஒலக்கூர் பகுதியில் இயங்கும் தனியார் கம்பெனிக்கு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்திலிருந்து மாணவியின் செல்போன் எண்ணை எடுத்த தனியார் கம்பெனி நிறுவன ஊழியர்கள் இருவர், மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி இச்சம்பவம் தொடர்பாக திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்த திண்டிவனம் மகளிர் போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கீழ்காரணையை சேர்ந்த பாண்டியன், சந்துரு என தெரிய வந்தது.
இதனையடுத்து இருவர் மீதும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.