திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகிற்காக இளம் நெறிஞர் பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியமர்த்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அலுவலகத்தில் திட்ட செயலாக்க அலகிற்காக மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வு மற்றும் தரமான தரவுகளை ஆய்வு செய்தல், ஆய்வுகளின் அடிப்படையில் விளக்க காட்சிகள் கொள்கை விளக்கங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக இளம் நெறிஞர் பணிக்கு பணியாற்றிட விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடத்திற்கு கணி அறிவியல், தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் அல்லது தரவு அறிவியல் மற்றும் புள்ளி இயல் படிப்பில் இளங்கலை பட்டம் (நான்கு ஆண்டு படிப்பு) அல்லது தொடர்புடைய படிப்பில் முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் மாநில அரசின் பணியாளர் தேர்வு விதிமுறையின் அடிப்படையில் இளம் நெறிஞர் நியமனம் நடைபெறும். தகுதியுள்ள இளம் நெறிஞருக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.50,000 வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 1.02.2025 முதல் 15.02.2025ஆம் தேதிக்குள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தினை மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர், மாவட்ட புள்ளி இயல் அலுவலகம், அறை எண்.115, மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டடம், திருவாரூர் -610 004 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.